சென்னை: ஸ்ரீ சாய்ராம் குழுமம் மற்றும் தற்சார்பு பாரத் மிஷன் சார்பில் ஒருநாள் மெகா தொழில்முனைவோர் திட்டம் நடைபெற்றது. இதில் சென்னை முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1,000 மாணவர்கள், 150 இளம் தொடக்க தொழில்முனைவோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சாய்ராம் நிறுவனங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமை தாங்கினார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியது: பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான 2047-ஐ வலியுறுத்தினார். “வரவிருக்கும் 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி பெற இந்தியாவில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய்ராம் குழுமம் மற்றும் தற்சார்பு பாரத் மிஷன் சார்பில் ஒருநாள் மெகா தொழில்முனைவோர் திட்டம் நடைபெற்றது. இதில் சென்னை முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1,000 மாணவர்கள், 150 இளம் தொடக்க தொழில்முனைவோர் கலந்துகொண்டனர்.