சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் சார்பில் கடந்த 4-ம் தேதி இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, வயது முதிர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்துதர வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் சார்பில் கடந்த 4-ம் தேதி இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, வயது முதிர்ந்த 4 பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.