Home இன்றைய செய்தி மழையால் நெற்பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

மழையால் நெற்பயிர்கள் சேதம்; விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

16
0

சென்னை: டெல்டா மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் உளுந்து உள்ளிட்ட ஊடுபயிர்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. ஏற்கெனவே வடகிழக்கு பருவமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleதெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ரூ.1,081 கோடி
Next articleஅரசு தொடக்கப் பள்ளிகள் தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரை பட்டியல் அனுப்ப உத்தரவு