Home இந்தியா மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு: வேகமெடுக்கும் தெற்கு ரயில்வே திட்டங்கள்

மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு: வேகமெடுக்கும் தெற்கு ரயில்வே திட்டங்கள்

0

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், ரயில் பாதை திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், யார்டு பராமரிப்பு, பாலங்கள், தண்டவாளங்கள் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.11,313 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புதிய பாதை அமைக்க ரூ.1,158.15 கோடி, அகலப் பாதை அமைக்க ரூ.475.78 கோடி, இரட்டைப் பாதை பணிக்கு ரூ.1,564.88 கோடி, ரயில் பாதை புதுப்பித்தல் பணிக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், ரயில் பாதை திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version