துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (79) துபாயில் நேற்று காலமானார். அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுகிறது.
1943 ஆகஸ்ட் 11-ல் டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். அவரது தாத்தா ஆங்கிலேயர் ஆட்சியில் வரி வசூல் அலுவலராகவும், அவரது தந்தை சையது அதிகாரியாகவும் பணியாற்றினர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது டெல்லியில் இருந்து கராச்சிக்கு முஷாரப் குடும்பம் இடம்பெயர்ந்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (79) துபாயில் நேற்று காலமானார். அவரது உடல் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுகிறது.