சென்னை: பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக, காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, நெல் கொள்முதல் விதிகளில் உரிய தளர்வுகளை அளிக்குமாறு பிரதமர்நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், நெல் கொள்முதல் விதிகளில் உரிய தளர்வுகளை வழங்க வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக, காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, நெல் கொள்முதல் விதிகளில் உரிய தளர்வுகளை அளிக்குமாறு பிரதமர்நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.