பெங்களூரு: கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவரான நீதிபதி வீரப்பா கடந்த வாரம் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கர்நாடகாவில் நிலுவையில் உள்ள ரூ.1000 கோடிக்கும் அதிகமான அபராதத்தை வசூலிக்க புதிய நடைமுறையை கையாள வேண்டும். குறிப்பாக அபராதத்தில் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு நேற்று புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக செலுத்த வேண்டிய நிலுவை அபராதத்தை வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் செலுத்தினால் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். இதனை போக்குவரத்து போலீஸாரிடம் மட்டுமின்றி இணையதளம், கூகுள் பே, பேடிஎம் போன்றவை வாயிலாகவும் செலுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவரான நீதிபதி வீரப்பா கடந்தவாரம் போக்குவரத்து விதிமுறைமீறல்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்