Home இன்றைய செய்தி நடப்பு நிதியாண்டில் 116 கி.மீ தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு

நடப்பு நிதியாண்டில் 116 கி.மீ தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு

15
0

சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.இவற்றில் நிறைவடைந்த பணிகள் விவரம்: மதுரை-தேனி (75 கி.மீ.) அகலப்பாதை பணி முடிந்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் சேவை தொடங்கியது. தேனி-போடிநாயக்கனூர் (15 கி.மீ.) மார்க்கத்தில் அகலப்பாதை பணி கடந்த டிசம்பரில் நிறைவடைந்தது. அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப் பூண்டி வரை (37 கி.மீ.) அகலப்பாதை பணி கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவடைந்தது.

மதுரை-வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி இரட்டை பாதை திட்டத்தில், ஒரு பகுதியாக, துலுக்கப்பட்டி-கோவில்பட்டி வரை (33 கி.மீ.) இரட்டைப்பாதை பணி முடிந்துள்ளது. மணியாச்சி-நான்குநேரி திட்டத்தில் ஒரு பகுதி யாக, நான்குநேரி- வள்ளியூர்-ஆரல்வாய்மொழி வரை (33.30 கி.மீ.) இரட்டைப்பாதை பணி நிறைவடைந்துள்ளது. இதுதவிர, கோட்டயம்-செங்காவனம் இரட்டைப்பாதை திட்டப்பணியும் முடிந்துள்ளன.

மதுரை-தேனி (75 கி.மீ.) அகலப்பாதை பணி முடிந்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் சேவை தொடங்கியது. தேனி-போடிநாயக்கனூர் (15 கி.மீ.) மார்க்கத்தில் அகலப்பாதை பணி கடந்த டிசம்பரில் நிறைவடைந்தது.

Previous articleஸ்ரீ சாய்ராம் குழுமம் சார்பில் மெகா தொழில் முனைவோர் திட்டம்
Next articleஏஐஎஸ்எப் மாநில மாநாடு சென்னையில் தொடக்கம்