சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,081 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு பேருந்து, கார்களைவிட ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. கட்டணம் குறைவு, உடல் அசதியில்லாத பயணம் உட்பட பல காரணங்களால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
இதனால், ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நெடுந்தொலைவு பயணத்துக்கு பேருந்து, கார்களைவிட ரயில் போக்குவரத்து மிகவும் உகந்ததாக உள்ளது. கட்டணம் குறைவு, உடல் அசதியில்லாத பயணம் உட்பட பல காரணங்களால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.