சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 18சாலைகளை பிப். 11-ம் தேதி முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 டன் திடக்கழிவு சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்குச்சென்று மக்கும், மக்காத குப்பைபிரித்து பெறப்படுகிறது. மேலும்,மாநகராட்சி சார்பில் முக்கியப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, சேகரமாகும் குப்பை லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
சென்னை மாநகராட்சி சார்பில் 18சாலைகளை பிப். 11-ம் தேதி முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.