வாஷிங்டன்: வானிலை ஆராய்ச்சி என்ற பெயரில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான உளவு பலூன்களை சீனா பறக்க விட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி சீன உளவு பலூன், அமெரிக்க வான் பரப்பில் நுழைந்தது. இந்த பலூன் கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் மான்டனா மாகாண பகுதிக்கு மேலே பறந்தது. அப்பகுதியில் உள்ள மால்ஸ்ட்ரோம் விமானப் படைத் தளத்தில் அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விமானப்படைத் தளத்தை உளவு பார்க்கவே அப்பகுதியில் சீன பலூன் பறக்கவிடப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. இதை மறுத்த சீன வெளியுறவு அமைச்சகம், "சீன பலூன் வானிலை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. வழிதவறி அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து விட்டது" என்று விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை அமெரிக்க அரசு ஏற்கவில்லை.
வானிலை ஆராய்ச்சி என்ற பெயரில் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான உளவு பலூன்களை சீனா பறக்க விட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 28-ம் தேதி சீன உளவு பலூன், அமெரிக்க வான் பரப்பில் நுழைந்தது. இந்த பலூன் கடந்த 3-ம் தேதி அமெரிக்காவின் மான்டனா மாகாண பகுதிக்கு மேலே பறந்தது. அப்பகுதியில் உள்ள மால்ஸ்ட்ரோம் விமானப் படைத் தளத்தில் அமெரிக்காவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.