புதுடெல்லி: கடந்த 1951-ம் ஆண்டு முதல் பொது தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 45.67 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டனர். அதன்பின் வாக்காளர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. வாக்கு சதவீதம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 91.20 கோடியாக உயர்ந்தது. இவர்களில் 67.40 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். நகர்ப்புறங்களில் சுமார் 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை. வேலை காரணமாக வெளியிடங்களுக்கு செல்வோர், ஓட்டுப்போட சொந்த ஊர் திரும்புவதில்லை. சமீபத்தில் நடந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்பட்டது.
கடந்த 1951-ம் ஆண்டு முதல் பொது தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டபோது இந்தியாவில் 17