Home இந்தியா இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில்: ரயில்வே அமைச்சர்...

இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரயில்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

0

புதுடெல்லி: தூங்கும் வசதியுடன் (ஸ்லீப்பர் பெர்த்) கூடிய வந்தே பாரத் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது. 2026-ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் நாட்டின் முதல் புல்லட் ரயிலின் தொடக்க ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, அகமதாபாத்- மும்பை புல்லட் ரயில் திட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெறுகின்றன. இந்த ரயில்களுக்கான டெண்டர் இந்த ஆண்டு வெளியிடப்படும். தற்போதைய வந்தே பாரத் ரயில்கள் 500-600 கி.மீ. பயணத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உள்ளன.

தூங்கும் வசதியுடன் (ஸ்லீப்பர் பெர்த்) கூடிய வந்தே பாரத் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version