Home இன்றைய செய்தி 7 ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்கள்

7 ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்கள்

24
0

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும், தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது டாடா நிறுவனம்தான் எலக்ட்ரிக் வாகன கார் சந்தையில் கோலோச்சி வருகிறது. இதற்கு போட்டியாக பிற நிறுவனங்களும் அடுத்தடுத்து களமிறங்கி வருகின்றன. மாருதி சுசூகி நிறுவனம், சமீபத்தில் நடந்த ஆட்டோ வாகன கண்காட்சியில் முதலாவது எலக்ட்ரிக் கான்செப்ட் காராக, இவிஎக்ஸ்-ஐ காட்சிப்படுத்தியது. இதன் உற்பத்தி 2025ல் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் அடுத்த 7 ஆண்டுகளில் 6 எலக்ட்ரிக் கார்களைச் சந்தைப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை இதுவரை இந்த நிறுவனம் சந்தைப்படுத்தாவிடினும், இந்திய வாகன விற்பனைச் சந்தையில் 40 சதவீதத்துக்கும் மேலான பங்களிப்பை இந்த நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇக்னைட் ஹெல்மெட்
Next articleதோனி – கோலி இடையிலான பெரிய வித்தியாசம்: கோலி ‘பாசிட்டிவ்’, தோனி அப்படி அல்ல!