Home இன்றைய செய்தி இக்னைட் ஹெல்மெட்

இக்னைட் ஹெல்மெட்

21
0

ஸ்டீல் பேர்டு நிறுவனம், புதிதாக இக்னைட் ஐஜிஎன்-7 என்ற ஹெல்மெட்டை அறிமுகம் செய்துளளது. இது, ஐரோப்பிய இசிஇ 22.06 தரச்சான்று பெற்றுள்ளது. இந்தச் சான்றினை பெற்ற முதல் இந்திய தயாரிப்பு ஹெல்மெட் இதுதான் என, ஸ்டீல் பேர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கச் சந்தையில் ஹெல்மெட்களை விற்பனை செய்வதற்கான டிஓடி எப்எம்விஎஸ்எஸ் எண்.218 மற்றும் இந்திய பிஐஎஸ் தரச்சான்றுகளையும் இந்த ஹெல்மெட் பெற்றுள்ளது. இந்த புதிய ஹெல்மெட்டின் துவக்க விலை ரூ.6,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஹெல்மெட்டுகளுக்கான இசிஇ 22.06 தர நிலை, இசிஇ 22.05க்கு பதிலாக கடந்த ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இ.சி.இ தரநிலை என்பது ஐரோப்பாவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஹெல்மெட் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகள் ஆகும்.  அதிக மற்றும் குறைந்த வேகத்தில் நிகழும் விபத்துகளின்போது எவ்வாறு தாக்கத்தை எதிர்கொள்கிறது உள்ளிட்ட 18 வகையான சோதaனை நிலைகளுக்கு பிறகு இந்த சான்று வழங்கப்படுகிறது. புதிய இசிஇ தர விதிமுறை அடுத்த ஆண்டு முதல் கட்டாய நடைமுறைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகாளான் குருமா
Next article7 ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்கள்