புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு ஆற்றும் முதல் உரை என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு ஆற்றும் முதல் உரை என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.