சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் இயக்குகிறார். விஜய் சிவன் நாயகனாக அறிமுகமாகிறார். சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழுக்கு வந்துள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது உட்பட பலர் நடிக்கின்றனர். தனுஜ் மேனன் இசை அமைக்கிறார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“குடியை பற்றிய படம் என்றாலும் அதை புரமோட் பண்ணும் படமாக இது இருக்காது. இந்த நாட்டின் பிரஜையை குடிமகன் என்று சொல்வார்கள். குடிப்பவர்களையும் அப்படித்தான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், ‘குடிமகானாக’ இருந்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் இந்தக் கதை உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குநர் பிரகாஷ்.என்.
சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் இயக்குகிறார். விஜய் சிவன் நாயகனாக அறிமுகமாகிறார்.