இந்தூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடி சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள்குவித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.1 ஓவர்களில் 212 ரன்கள் விளாசி மிரளச் செய்தது. தனது 30-வது சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 85 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் போல்டானார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.