Home ஆன்மிகம் ரயில் பாதையைத் தள்ளிவைத்த ஒத்த பனை ஜடா முனீஸ்வரர் – வேலூரில் அதிசய ஆலயம்!

ரயில் பாதையைத் தள்ளிவைத்த ஒத்த பனை ஜடா முனீஸ்வரர் – வேலூரில் அதிசய ஆலயம்!

6
0

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் குடியாத்தம் ரோட்டில் வெங்கடேசபுரம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ளது ஒத்தப் பனை ஜடா முனீஸ்வரர் கோயில். ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்தக் கோயில் குறித்து ஊர்க்காரர்கள் சொல்லும் செய்தி மிகவும் சுவாரஸ்யமானது.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணியைத் தொடங்கினார். வழியில் இருந்த ஒத்தப் பனையை அகற்றும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் இறங்கினர். ஆனால் முடியவில்லை. சிலர் வீம்பாக முயற்சி செய்தும் நடக்கவில்லை. மாறாக சில அபசகுணங்கள் நிகழ்ந்தன.

ஒத்த பனை ஜடா முனீஸ்வரர்

அப்போது அந்த ஊர்க்காரர்கள், அந்த மரம் சக்தி வாய்ந்தது என்றும் அதில் முனீஸ்வரர் குடியிருக்கிறார் என்றும் கூற உடனே ரயிலின் பாதையை சிறிது தூரம் தள்ளித் திட்டமிட்டு அவ்வண்ணமே அமைத்தனர்.

அதுவரை ஒருசிலரே வழிபட்டு வந்த ஜடாமுனீஸ்வரரை அநேகர் வந்து வழிபட ஆரம்பித்தனர். இந்தப் பனைமரத்தைச் சுற்றி ஏழு வேப்பமரங்கள் உள்ளன. தானாகவே முளைத்த இந்த மரங்களில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது.

ஒத்த பனை ஜடா முனீஸ்வரர்

முனீஸ்வரர் வாழும் பனைமரத்தில் சந்தனம் பூசி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்த ஈஸ்வரனுக்கு கேந்திப் பூ மாலை உகந்தது என்கிறார்கள். ஜடாமுனீஸ்வரருக்கு அருகிலேயே பாறை வடிவில் பொன்னியம்மாள் எழுந்தருளியிருப்பதாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பொன்னியம்மாளுக்கு பக்தர்கள் மஞ்சள் பூசியும் சந்தனம் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். வாரத்தின் ஏழு நாள்களும் மாறுபட்ட கோலத்தில் தரிசனம் கொடுக்கிறாள் அன்னை.

வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒத்த பனை ஜடா முனீஸ்வரர்!

இங்கு வரும் பக்தர்கள், தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொண்டால் அவர்களின் குறைகள் விரைவில் தீர்கின்றன என்கிறார்கள். ஜடாமுனீஸ்வரருக்குப் பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டால் தீராத துன்பங்களும் தீர்கின்றன என்பது நம்பிக்கை.

கடன் பிரச்னை, எதிரிகளின் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய குறைகளோடு வந்து வேண்டிக்கொள்பவர்கள் விரைவில் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறப்பெருகிறார்கள் என்கிறார்கள் ஊர்மக்கள்.

பொன்னியம்மாள்

வருடத்துக்கு ஒருமுறை வைகாசி மாதம் பனை மரத்தைச் சுற்றி இருக்கும் ஊர்களான ஏரி முனை, வெங்கடேசபுரம், கிளித்தாம்பட்டரை சார்ந்த இந்த மூன்று ஊர் மக்களும் ஊரைக் காக்க ஒன்றுகூடிப் பொங்கல் வைத்து முனீஸ்வரருக்கு நன்றி செலுத்துகிறார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களின் கைகளில் பூஜை செய்யப்பட்ட கயிறு கட்டப்படுகிறது. இந்தக் கயிற்றைக் கைகளில் கட்டிகொள்கிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பது நம்பிக்கை.

காட்பாடியைச் சுற்றியுள்ள பலரும் இந்த முனீஸ்வரருக்கு பக்தர்களாக இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பொங்கல் வைத்து வழிபடுவது விசேஷம்.வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் குடியாத்தம் ரோட்டில் வெங்கடேசபுரம் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ளது ஒத்தப் பனை ஜடா முனீஸ்வரர் கோயில். ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்திருக்கும் இந்தக் கோயில் குறித்து ஊர்க்காரர்கள் சொல்லும் செய்தி மிகவும் சுவாரஸ்யமானது.சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணியைத் தொடங்கினார். வழியில் இருந்த ஒத்தப் பனையை அகற்றும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் இறங்கினர். ஆனால் முடியவில்லை. சிலர் வீம்பாக முயற்சி செய்தும் நடக்கவில்லை. மாறாக சில அபசகுணங்கள் நிகழ்ந்தன. ஒத்த பனை ஜடா முனீஸ்வரர்அப்போது அந்த ஊர்க்காரர்கள், அந்த மரம் சக்தி வாய்ந்தது என்றும் அதில் முனீஸ்வரர் குடியிருக்கிறார் என்றும் கூற உடனே ரயிலின் பாதையை சிறிது தூரம் தள்ளித் திட்டமிட்டு அவ்வண்ணமே அமைத்தனர்.அதுவரை ஒருசிலரே வழிபட்டு வந்த ஜடாமுனீஸ்வரரை அநேகர் வந்து வழிபட ஆரம்பித்தனர். இந்தப் பனைமரத்தைச் சுற்றி ஏழு வேப்பமரங்கள் உள்ளன. தானாகவே முளைத்த இந்த மரங்களில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது.ஒத்த பனை ஜடா முனீஸ்வரர்முனீஸ்வரர் வாழும் பனைமரத்தில் சந்தனம் பூசி வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்த ஈஸ்வரனுக்கு கேந்திப் பூ மாலை உகந்தது என்கிறார்கள். ஜடாமுனீஸ்வரருக்கு அருகிலேயே பாறை வடிவில் பொன்னியம்மாள் எழுந்தருளியிருப்பதாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பொன்னியம்மாளுக்கு பக்தர்கள் மஞ்சள் பூசியும் சந்தனம் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். வாரத்தின் ஏழு நாள்களும் மாறுபட்ட கோலத்தில் தரிசனம் கொடுக்கிறாள் அன்னை.வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒத்த பனை ஜடா முனீஸ்வரர்!இங்கு வரும் பக்தர்கள், தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொண்டால் அவர்களின் குறைகள் விரைவில் தீர்கின்றன என்கிறார்கள். ஜடாமுனீஸ்வரருக்குப் பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டால் தீராத துன்பங்களும் தீர்கின்றன என்பது நம்பிக்கை. கடன் பிரச்னை, எதிரிகளின் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இன்மை ஆகிய குறைகளோடு வந்து வேண்டிக்கொள்பவர்கள் விரைவில் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறப்பெருகிறார்கள் என்கிறார்கள் ஊர்மக்கள்.பொன்னியம்மாள்வருடத்துக்கு ஒருமுறை வைகாசி மாதம் பனை மரத்தைச் சுற்றி இருக்கும் ஊர்களான ஏரி முனை, வெங்கடேசபுரம், கிளித்தாம்பட்டரை சார்ந்த இந்த மூன்று ஊர் மக்களும் ஊரைக் காக்க ஒன்றுகூடிப் பொங்கல் வைத்து முனீஸ்வரருக்கு நன்றி செலுத்துகிறார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்களின் கைகளில் பூஜை செய்யப்பட்ட கயிறு கட்டப்படுகிறது. இந்தக் கயிற்றைக் கைகளில் கட்டிகொள்கிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பது நம்பிக்கை.காட்பாடியைச் சுற்றியுள்ள பலரும் இந்த முனீஸ்வரருக்கு பக்தர்களாக இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பொங்கல் வைத்து வழிபடுவது விசேஷம்.

Previous articleபாலகிருஷ்ணா ஜோடியாகிறார் காஜல் அகர்வால்
Next articleவித்யாசாகர் கல்லூரி, ‘இந்து தமிழ் திசை’ நடத்திய விநாடி- வினா போட்டி பரிசளிப்பு