உன்னி முகுந்தன், சிறுமி தேவநந்தா, மனோஜ் கே.ஜெயன், சம்பத் ராம் உட்பட பலர் நடித்து மலையாளத்தில் வெற்றி பெற்ற படம், ‘மாளிகப்புரம்’. விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இந்தப் படம் வரும் 26ம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் படத்தை வெளியிடுகிறார். படக்குழு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது உன்னி முகுந்தன் பேசியதாவது:
12 வருடங்களுக்கு முன்பு ‘சீடன்’படத்திற்காக இங்கு வந்தேன். அப்போது தனுஷுடன் சிறந்த அனுபவம் கிடைத்தது. இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். இது என் மற்ற படங்களைப் போல் வெறும் திரைப்படம் மட்டுமல்ல. இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் எனக்கு முக்கியமான படமாக இது இருக்கும். இந்தப் படத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனக்கு நல்ல குடும்பப் படத்தில் நடிக்கும் ஆசை இருந்தது. இந்தப் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. நானும் ஐயப்ப பக்தன்தான். ஒரு சிறுமி ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல ஆசைப்படுகிறாள். அவர் எப்படி சென்று வருகிறாள் என்பதே படத்தின் ஒருவரி கதை.
உன்னி முகுந்தன், சிறுமி தேவநந்தா, மனோஜ் கே.ஜெயன், சம்பத் ராம் உட்பட பலர் நடித்து மலையாளத்தில் வெற்றி பெற்ற படம், ‘மாளிகப்புரம்’. விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இந்தப் படம் வரும் 26ம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.