புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவண படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள்மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா – மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவண படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள்மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.