காஜியாபாத்: நேபாளத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கரா நகருக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15-ம்தேதி காலையில் புறப்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் விமானி உள்ளிட்ட 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். போக்காரா நகரில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. இதுவரை 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டன.