திண்டுக்கல் | திரைப்படப் பாணியில் திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு நகைகள், பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் நேற்று காலை 10.30 மணியளவில் ஊழியர்கள் 4 பேர் பணியை தொடங்கினர். அப்போது வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், ஊழியர்கள் மீது திடீரென மிளகாய் பொடியை தூவிவிட்டு, கயிற்றால் அவர்களின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகள், பணத்தைத் தேடினார்.
திரைப்படப் பாணியில் திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு நகைகள், பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்