சென்னை: திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு 4500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது.
திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட 23 அணிகள் உள்ளன. இந்த அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் உள்ளனர். இதற்கிடையே, திமுக உட்கட்சித் தேர்தல் முடிவுற்று, தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, 23 அணிகளின் மாநிலசெயலாளர்கள், தலைவர்கள்பொறுப்புக்குத் தகுதியானவர்களை திமுக தலைமை நியமித்து அறிவித்தது.
திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு 4500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது.