சென்னை: சவுகார்பேட்டையில் ஆவணம் ஏதுமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
யானைகவுனி போலீஸார் நேற்று முன்தினம் மதியம் சவுகார்பேட்டை, ஆதியப்பா தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இருவர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில், அதில் ரூ.7 கோடியே 38 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
இருவரும் நகைகளை விற்க சென்னை வந்ததும் தெரியவந்தது. ஆனால், அவர்களிடம் தங்க நகைகளுக்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.