Home இன்றைய செய்தி சந்தையில் சிப் தட்டுப்பாடு காரணமாக மடிக்கணினி வழங்குவதில் தாமதம் – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

சந்தையில் சிப் தட்டுப்பாடு காரணமாக மடிக்கணினி வழங்குவதில் தாமதம் – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

11
0

சென்னை: சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதற்குரிய விவரங்களை நிதித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ஆசிரியர்கள் தகவல்களை பதிவேற்றுவதில் சிரமம் இருந்தது. இந்த விவரத்தை நிதித்துறைக்கு தெரிவித்து சிக்கல் சரிசெய்யப்பட்டது. தற்போது வலைதளம் வழக்கம்போல் இயங்குகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்

Previous articleபொதுமக்கள் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் – மின்வாரிய அதிகாரிகள் தகவல்
Next articleஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு – கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு