கோவை: கோவை விமான நிலையத்தில் போலி ஆவணங்களை காட்டி ஊடுருவ முயன்ற வங்கதேச இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தேசியகீதத்தை பாட சொன்னபோது அவர் சிக்கினார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 6.25 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தேசிய கீதத்தை பாட அறிவுறுத்தினர். தேசிய கீதம் தெரியாமல் திணறிய அந்த இளைஞர், பாட மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 6.25 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.