பழநி: பழநி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது. எட்டு கால வேள்வி பூஜைகள் நிறைவுபெற்ற பின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று இரண்டாம் கால வேள்வி வழிபாட்டின்போது இறைவன் அனுமதி பெறுதல், விநாயகர் பூஜை, தூமொழி பகர்தல், புனித நீர்க்குட வழிபாடு, தொடர்ந்து முற்றோதுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
பழநி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது. எட்டு கால வேள்வி பூஜைகள் நிறைவுபெற்ற பின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.