ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுமா என ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 91 உயா்நிலை, 99 மேல்நிலை, 159 நடுநிலைப்பள்ளிகள் என 349 அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த நவம்பர் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுமா என ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.