விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல் நிலை குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான, பாடல் காட்சி கடந்த ஜனவரி 16-ம் தேதி லங்காவி தீவில் நடந்து வந்தது. கடலுக்குள் செலுத்தும் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் பைக்கில் விஜய் ஆண்டனியும் காவ்யா தாப்பரும் செல்வதுபோல படமாக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்றுவரும் நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல் நலம் குறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.