ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.
2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. அண்மையில் இறுதிப் பரிந்துரைகளுக்கான 15 போட்டித் தெரிவுகளில் இடம்பெற்றுள்ள ஷார்ட் லிஸ்ட் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியல் இன்று மாலை 7 மணி அளவில் வெளியாக உள்ளது.