Home இன்றைய செய்தி தாம்பரத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

தாம்பரத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

4
0

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தாம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் போலீசார் தொடர் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே கிரவுண்ட் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.இதை தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியபோது அவர்களிடம் சுமார் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தீபக் (31), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த  நவமணி (30) என்பதும், பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous articleசெல்போன் பறித்த 2 பேர் பிடிபட்டனர்
Next articleதனியார் விடுதியில் பாலியல் தொழில்: 4 பேர் சிக்கினர்