அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த கீழ்விதி கிராமத்தில் உள்ள கோயிலில் கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூவர் பலியாகி உள்ளதாக தகவல். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
அந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து, விபத்து ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் அடுத்த கீழ்விதி கிராமத்தில் உள்ள கோயிலில் கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூவர் பலியாகி உள்ளதாக தகவல். இதில் பலர் காயமடைந்துள்ளனர்.