Home இன்றைய செய்தி கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு: மர்மமாக இறந்து கிடந்த நாய், ஆடு, கோழிகள்

கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு: மர்மமாக இறந்து கிடந்த நாய், ஆடு, கோழிகள்

7
0

* சிறுத்தை நடமாட்டமா? * பொதுமக்கள் பீதி* இரவு வெளியே வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கைசின்னசேலம்: கள்ளக்குறிச்சி அருகே நாய், ஆடு, கோழிகள்  மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் ஊருக்குள் சிறுத்தை  நடமாட்டம் ஏதேனும் இருக்கலாம் என ஐயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ளது காரனூர் கிராமம். இங்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தின் அருகில் சித்தேரி, பெரிய ஏரி என்ற இரண்டு ஏரிகள் உள்ளன. இக்கிராமத்தில் 100க்கும்  மேற்பட்டோர் காட்டுக் கொட்டாயில் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேசன் என்பவரது வயலின் அருகில் இருந்த மரத்தின்மேல்  உட்கார்ந்திருந்த 15க்கு மேற்பட்ட கோழிகள் அருகில் இருந்த மரவள்ளி வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அதைப்போல நேற்று முன்தினம் இரவு நடேசன் என்பவரது காட்டுக்கொட்டாயில் இருந்து  நாயும், ஆடும் மாயமானது. இந்நிலையில் நடேசன் வயலில் துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்றுபார்த்தபோது நாயும், ஆடும் இறந்து கிடந்தது. மேலும் அருகில் சாணமும் மரவள்ளி வயலில் கால்நடை தடமும் இருந்தது தெரியவந்தது. உடனடியாக பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காரனூர் கிராமத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி வனத்துறை அதிகாரிகள்  சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு கிடந்த சாணத்தை எடுத்து சென்னை பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறையினர் வயல்வெளிகளில் தொடர்ந்து முகாமிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கிராம மக்கள் காரணம் இல்லாமல் இரவில் வெளியே வர வேண்டாம் என்றும், ஏதேனும் விலங்கு தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்டோவில் வீதி வீதியாக சென்று ஒலிபெருக்கி வாயிலாக எச்சரித்தனர். இந்த சம்பவம் காரனூர் மற்றும் குதிரைச்சந்தல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இடையே  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர்.

Previous articleமேல்மலையனூர் தாலுகாவில் தர்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
Next articleபனியின் தாக்கம் அதிகரிப்பு: ஊட்டியில் ‘0’ டிகிரி எட்டும் அபாயம்