Home இன்றைய செய்தி யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய சுரங்கப்பாதை: ரூ.8 கோடி மதிப்பீட்டில் ரயில்வேத்துறை அமைத்து வருகிறது

யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய சுரங்கப்பாதை: ரூ.8 கோடி மதிப்பீட்டில் ரயில்வேத்துறை அமைத்து வருகிறது

2
0

கோவை: கோவையில் ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழக்கும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் புதிய சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மதுக்கரை வனப்பகுதியில் இருந்து உணவு, குடிநீர் தேடி காட்டை விட்டு யானைகள் அடிக்கடி வெளியே வரும் நிலையில் ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 6 விபத்துகளில் 11 காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் கோவை நவகரை அருகே ரயில் மோதிய விபத்தில் குட்டி உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மேற்கொண்ட விசாரணையில் ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறை மற்றும் ரயில்வேத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து யானைகள் வழக்கமாக ரயில் பாதையை கடக்கும் இடத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும் என வனத்துறை பரிந்துரை செய்தது. இது தொடர்பாக விளக்கமளிக்க ரயில்வேத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் மதுக்கரை வாலையாறு இடையே 2 சுரங்கபாதைகள் அமைக்க முடிவு செய்த ரயில்வேத்துறை ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் ரயிலில் யானை மோதலை தடுக்கும் வகையில் கோவை மாவட்ட வனத்துறையினர் மதுக்கரை வனப்பகுதியில் நேர கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளனர். வழக்கமாக 7 பேர் ரோந்து செல்லும் நிலையில் தற்போது 23 பேர் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் கண்காணிப்பு காரணமாக ரயில் மோதி யானை இறக்கும் சம்பவங்கள் குறைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுரங்கப்பாதை பணிகளும் நிறைவடைந்தால் முற்றிலுமாக ரயில் யானை மோதல் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோலி டிரோன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கொண்டும் யானைகளை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தங்களும் தற்போது கோரப்பட்டுள்ளது. 

Previous article“எப்போதுமே இந்திய அணிக்கு இதுதான் பிரச்சினை” – நியூஸி.யை போராடி வென்றது குறித்து சுனில் கவாஸ்கர்
Next articleஇடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம்