புதுடெல்லி: திரிபுராவில் பிப்.16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்.27-ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகின்றன.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
திரிபுராவில் பிப்.16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்.27-ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகின்றன.