Home இன்றைய செய்தி வாலிபரை பிளேடால் அறுத்து வழிப்பறி செய்த ரவுடி கைது

வாலிபரை பிளேடால் அறுத்து வழிப்பறி செய்த ரவுடி கைது

7
0

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர், அயனாவரம் பகுதியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் உள்ள ரயில்வே பிளாட்பாரம் ஓரம் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது, அங்கு குடிபோதையில் இருந்த 2 பேர் கார்த்திக்கிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே கையில் இருந்த பிளேடை எடுத்து கார்த்திகை சரமாரியாக அறுத்தனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கார்த்திக்கை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மேட்டுப்பாளையம் கந்தன் தெருவை சேர்ந்த எலி (எ) கமலக்கண்ணன் (20), அவரது நண்பர் சூர்யா (எ) காவாமேடு சூர்யா (22) என்ற நபருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று எலி (எ) கமலக்கண்ணனை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, இவர் மீது ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன. மேலும், கமலக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Previous articleஇடப்பிரச்னையால் முன்விரோதம் அடுத்தடுத்து சகோதரர்கள் சரமாரி குத்திக்கொலை : பிளஸ் 2 மாணவன் கைது
Next articleகஞ்சா விற்ற வடமாநில பெண்கள் கைது: 12 கிலோ பறிமுதல்