Home சினிமா இந்திய சினிமா Pathaan: 1500 நாள்களுக்குப் பிறகு ஷாருக்கான் படம்; FDFS பார்க்க 200 நகரங்களில் 50000 ரசிகர்கள்...

Pathaan: 1500 நாள்களுக்குப் பிறகு ஷாருக்கான் படம்; FDFS பார்க்க 200 நகரங்களில் 50000 ரசிகர்கள் ரெடி!

20
0

பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள `பதான்’ படம் வரும் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் அவர் நாயகனாக நடித்துள்ள படம் வெள்ளித்திரையில் வெளியாகவிருப்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

‘பதான்’ படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் அதனைக் காண ஷாருக்கான் ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். படத்தின் முதல் பாடல் வெளியான போதே பெரும் சிக்கலை எதிர்கொண்ட ‘பதான்’ படத்தை எப்படியேனும் வெற்றி பெறச்செய்யவேண்டும் என்பதில் ஷாருக்கான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். வரும் 25ம் தேதி முதல் நாள் முதல் காட்சியைக் காண ‘ஷாருக்கான் யுனிவர்ஸ்’ என்ற ரசிகர் மன்ற அமைப்பு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மொத்தம் 200 நகரங்களில் ஒரே நேரத்தில் முதல் காட்சியை 50,000 பேர் பார்க்கவிருக்கின்றனர்.

‘பதான்’ படத்தில் தீபிகா படுகோன்

இது குறித்து ஷாருக்கான் யுனிவர்ஸ் இணை நிறுவனர் யாஷ் பர்யானி கூறுகையில், “முதல் நாள் முதல் காட்சிக்கு 50,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதல் காட்சியில் மட்டும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதனை அனைத்து நகரங்களிலும் செய்கிறோம். மும்பையில் மட்டும் 8 இடங்கள், டெல்லியில் 6 இடங்கள் என ரசிகர்களுக்காக முதல் நாள் முதல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் காட்சியைப் பார்த்ததோடு நாங்கள் நிறுத்திக்கொள்ளப்போவதில்லை. தொடர்ந்து படத்தைப் பார்த்துக்கொண்டே இருப்போம். அதோடு தியேட்டர்களில் பிரமாண்ட கட் அவுட்டுகள் வைக்கவும் முடிவு செய்துள்ளோம். ‘பதான்’ படம் வெளியாவதை நாங்கள் விழாவாகக் கொண்டாட இருக்கிறோம். ‘பதான்’ படம்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக ஐமேக்ஸ் பார்மேட்டில் படமாக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Pathaan`பதான்’ படத்துக்கு சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 1500 நாள்களுக்குப் பிறகு ஷாருக்கானின் படம் திரைக்கு வருவதால் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள `பதான்’ படம் வரும் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் அவர் நாயகனாக நடித்துள்ள படம் வெள்ளித்திரையில் வெளியாகவிருப்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
‘பதான்’ படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் அதனைக் காண ஷாருக்கான் ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். படத்தின் முதல் பாடல் வெளியான போதே பெரும் சிக்கலை எதிர்கொண்ட ‘பதான்’ படத்தை எப்படியேனும் வெற்றி பெறச்செய்யவேண்டும் என்பதில் ஷாருக்கான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். வரும் 25ம் தேதி முதல் நாள் முதல் காட்சியைக் காண ‘ஷாருக்கான் யுனிவர்ஸ்’ என்ற ரசிகர் மன்ற அமைப்பு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மொத்தம் 200 நகரங்களில் ஒரே நேரத்தில் முதல் காட்சியை 50,000 பேர் பார்க்கவிருக்கின்றனர்.
‘பதான்’ படத்தில் தீபிகா படுகோன்இது குறித்து ஷாருக்கான் யுனிவர்ஸ் இணை நிறுவனர் யாஷ் பர்யானி கூறுகையில், “முதல் நாள் முதல் காட்சிக்கு 50,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதல் காட்சியில் மட்டும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் வசூலாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதனை அனைத்து நகரங்களிலும் செய்கிறோம். மும்பையில் மட்டும் 8 இடங்கள், டெல்லியில் 6 இடங்கள் என ரசிகர்களுக்காக முதல் நாள் முதல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் காட்சியைப் பார்த்ததோடு நாங்கள் நிறுத்திக்கொள்ளப்போவதில்லை. தொடர்ந்து படத்தைப் பார்த்துக்கொண்டே இருப்போம். அதோடு தியேட்டர்களில் பிரமாண்ட கட் அவுட்டுகள் வைக்கவும் முடிவு செய்துள்ளோம். ‘பதான்’ படம் வெளியாவதை நாங்கள் விழாவாகக் கொண்டாட இருக்கிறோம். ‘பதான்’ படம்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக ஐமேக்ஸ் பார்மேட்டில் படமாக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
Pathaan`பதான்’ படத்துக்கு சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 1500 நாள்களுக்குப் பிறகு ஷாருக்கானின் படம் திரைக்கு வருவதால் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Previous articleகாங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரி மறைவு: இந்திய ஒற்றுமை யாத்திரை தற்காலிக நிறுத்தம்
Next articleசனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 – சிம்மம் ராசியினருக்கு எப்படி?