புதுடெல்லி: ‘‘சீனா உட்பட பல நாடுகளில்கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பயப்பட தேவையில்லை. இங்கு இயற்கையான தொற்று மற்றும் தடுப்பூசி கலந்து நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது’’ என்று மத்திய அரசின் நோய் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. அதன்பின் படிப்படியாக பல நாடுகளில் குறைந்தது. ஆனால், சீனாவில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்தது. தற்போது சீனா, ஜப்பான், கொரியா உட்பட பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா உட்படபல முக்கிய நகரங்களில் தொற்றுஅதிகரித்துள்ளது. இந்த நகரங்களில் முகக் கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
‘‘சீனா உட்பட பல நாடுகளில்கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பயப்பட தேவையில்லை. இங்கு இயற்கையான தொற்று மற்றும் தடுப்பூசி கலந்து நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது’’ என்று மத்திய அரசின் நோய் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.