Home இன்றைய செய்தி Oppenheimer: “கிராபிக்ஸ் இல்லாமல் அணு ஆயுத சோதனையைத் தத்ரூபமாகப் படமாக்கினோம்”- கிறிஸ்டோபர் நோலன்

Oppenheimer: “கிராபிக்ஸ் இல்லாமல் அணு ஆயுத சோதனையைத் தத்ரூபமாகப் படமாக்கினோம்”- கிறிஸ்டோபர் நோலன்

28
0

`இன்டர்ஸ்டெல்லார்’, `இன்செப்ஷன்’, `டெனட்’ போன்ற சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்கள் எடுப்பதில் கைத்தேர்ந்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன்.

இவர் தற்போது அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் என்பவரின் வாழ்க்கையைக் கதைகளமாக வைத்து ‘ஓப்பன்ஹெய்மர்’ எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். இந்தப் படத்தில் ‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அணு ஆயுத சோதனையை கிராபிக்ஸ் மூலம் காட்சிபடுத்துவது சரியாக இல்லை என்பதனால் படத்திற்காக உண்மையிலேயே அணு ஆயுத சோதனையை மீட்டுருவாக்கம் செய்து தத்ரூபமாகப் படம்பிடித்துவிட்டதாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார்.

‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தின் போஸ்டர்

இது பற்றி பேசிய நோலன், “இத்திரைப்படத்தை உருவாக்குவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக, அணு ஆயுத சோதனையைக் காட்சிப்படுத்துவதில் நிறைய சவால்கள் இருந்தன. ‘CGI’ மூலம் அணு ஆயுதம் சோதனையை முழுமையாகக் காட்சிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், அது தத்ரூபமாக இல்லை. அதற்கு நிறைய செலவுமானது. எனவே படக்குழுவினரின் கூட்டு முயற்சியால் படப்பிடிப்பிற்காக உண்மையிலேயே ஒரு அணு ஆயுத சோதனையை மீட்டுருவாக்கம் செய்து கிராபிக்ஸ் இல்லாமல் தத்ரூபமாக படமாக்கிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

பொதுவாகவே இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கிராபிக்ஸைப் பெரிதும் விரும்பமாட்டார் என்பதால் அவர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல டிஜிட்டல் மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் நாட்டமில்லாதவர் நோலன். இப்போது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்துக்காக முதன்முறையாக பிளாக் அண்டு ஒயிட் காட்சிகளையும் ஐமேக்ஸ் பிலிம் கேமரா தொழில்நுட்பத்திலேயே படமாக்கியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

`இன்டர்ஸ்டெல்லார்’, `இன்செப்ஷன்’, `டெனட்’ போன்ற சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்கள் எடுப்பதில் கைத்தேர்ந்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன்.
இவர் தற்போது அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் என்பவரின் வாழ்க்கையைக் கதைகளமாக வைத்து ‘ஓப்பன்ஹெய்மர்’ எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். இந்தப் படத்தில் ‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அணு ஆயுத சோதனையை கிராபிக்ஸ் மூலம் காட்சிபடுத்துவது சரியாக இல்லை என்பதனால் படத்திற்காக உண்மையிலேயே அணு ஆயுத சோதனையை மீட்டுருவாக்கம் செய்து தத்ரூபமாகப் படம்பிடித்துவிட்டதாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார்.
‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தின் போஸ்டர்இது பற்றி பேசிய நோலன், “இத்திரைப்படத்தை உருவாக்குவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக, அணு ஆயுத சோதனையைக் காட்சிப்படுத்துவதில் நிறைய சவால்கள் இருந்தன. ‘CGI’ மூலம் அணு ஆயுதம் சோதனையை முழுமையாகக் காட்சிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், அது தத்ரூபமாக இல்லை. அதற்கு நிறைய செலவுமானது. எனவே படக்குழுவினரின் கூட்டு முயற்சியால் படப்பிடிப்பிற்காக உண்மையிலேயே ஒரு அணு ஆயுத சோதனையை மீட்டுருவாக்கம் செய்து கிராபிக்ஸ் இல்லாமல் தத்ரூபமாக படமாக்கிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
பொதுவாகவே இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கிராபிக்ஸைப் பெரிதும் விரும்பமாட்டார் என்பதால் அவர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல டிஜிட்டல் மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் நாட்டமில்லாதவர் நோலன். இப்போது ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்துக்காக முதன்முறையாக பிளாக் அண்டு ஒயிட் காட்சிகளையும் ஐமேக்ஸ் பிலிம் கேமரா தொழில்நுட்பத்திலேயே படமாக்கியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்தியா-சீனா மோதல்: “சீனாவுடனான வர்த்தகத்தை ஏன் நிறுத்தக்கூடாது” – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
Next articleபதான் பாடலில் தீபிகா படுகோனின் உடைகளை சரிசெய்ய வேண்டும்- மத்திய அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம்!