Home இந்தியா 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிப்பு: மத்திய அமைச்சர் நிதின்...

15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

12
0

புது டெல்லி: 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகங்கள் வசமுள்ள பழமையான பேருந்துகளும் இதில் உள்ளடங்கும்.

கடந்த நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய அரசு வாகன அழிப்புக் கொள்கையை அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதில் தேர்ச்சியடையாத வாகனங்கள் அழிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.

15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனாவுக்கு உலக அளவில் 6,636,230 பேர் பலி
Next articleபாரதியார் இல்லத்தை நினைவகமாக மாற்றுவது யார்? உ.பி, அரசு தீவிரம்; தமிழக அரசின் முயற்சிக்கு சிக்கல்