Home இன்றைய செய்தி ராகுல் காந்தியின் நடைபயணம் பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும்: அன்புமணி ராமதாஸ் கருத்து

ராகுல் காந்தியின் நடைபயணம் பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும்: அன்புமணி ராமதாஸ் கருத்து

14
0

நாகப்பட்டினம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் இந்திய அளவில் பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும் என பாமகதலைவர் அன்புமணி தெரிவித்தார்.

பாமக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, நாகை கோட்டைவாசல்படியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: குறுவை அறுவடைக்கு பிறகு நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக திறக்கப்படாததால், விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்து நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, அதிகளவில் அரசின் கொள்முதல் நிலையங்களைத் திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக, கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

குறுவை அறுவடைக்கு பிறகு நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக திறக்கப்படாததால், விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்து நஷ்டம் அடைந்துள்ளனர்.

Previous articleவிடுமுறை தினத்தை முன்னிட்டு பழநி கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: அதிக அளவில் பஞ்சாமிர்தம் விற்பனை
Next articleஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்