புது டெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியின் ஹனுமர் படித்துறை பகுதியில் பாரதியார் இளம் வயதில் வாழ்ந்த இல்லம் உள்ளது. 'சிவமடம்' என்றழைக்கப்படும் இங்கு பாரதியார் நான்கரை ஆண்டுகள் வாழ்ந்தார். தற்போது இந்த இல்லத்தில் பாரதியாரின் சகோதரி மருமகன் பி.வி.கிருஷ்ணன் (97), அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், பாரதியார் வசித்த இல்லத்தை நினைவகமாக மாற்ற குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக முழு வீட்டையும் அரசிடம் ஒப்படைக்க கிருஷ்ணன் மறுத்தார்.
இந்நிலையில், பாரதியார் குடும்பத்தினரிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஒரு சிறிய அறையை மட்டும் நினைவகமாக்க ஒத்துக் கொள்ளப்பட்டது. பாரதியாரின் மார்பளவு சிலையுடன் ஒரு நூலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு கடந்த ஜுலை 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது. பாரதி குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்று ரூ.18 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 20-ம் தேதி இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டது.
உத்தர பிரதேசம் வாரணாசியின் ஹனுமர் படித்துறை பகுதியில் பாரதியார் இளம் வயதில் வாழ்ந்த இல்லம் உள்ளது. ‘சிவமடம்’ என்றழைக்கப்படும் இங்கு பாரதியார் நான்கரை ஆண்டுகள் வாழ்ந்தார்.