முன்னாள் கபடி வீரரான பொத்தாரிக்கு (ராஜ்கிரண்), ஊரில் சிலை வைக்கும் அளவுக்கு மரியாதை. மகன்கள், பேரன்கள் என கூட்டு குடும்பமாக வாழும் அவருக்கும் அவர் பேரன் சின்னத்துரைக்கும் (அதர்வா) பேச்சுவார்த்தை இல்லை. ஏன் என்பதற்கு இருக்கிறது, 'பிளாஷ்பேக்'.
உள்ளூர் பொறாமைக்காரர்களின் சதியால் பொத்தாரியின் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட, கபடி வீரரான அவரின் மற்றொரு பேரன் செல்லையா (ராஜ் ஐயப்பா) தற்கொலை செய்கிறார். அந்த அவப்பெயரைக் களைந்து, தம்பியின் தற்கொலைக்குப் பின்னுள்ள காரணத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, பிரிந்த குடும்பத்தை சின்னத்துரை எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பதுதான் ‘பட்டத்து அரசன்’.
முன்னாள் கபடி வீரரான பொத்தாரிக்கு (ராஜ்கிரண்), ஊரில் சிலை வைக்கும் அளவுக்கு மரியாதை. மகன்கள், பேரன்கள் என கூட்டு குடும்பமாக வாழும் அவருக்கும் அவர் பேரன் சின்னத்துரைக்கும் (அதர்வா) பேச்சுவார்த்தை இல்லை.