நாமக்கல்: நாமக்கல்லில் இரு வீடுகளில் புகுந்து பெண்களை மிரட்டி நான்கரை பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் போதுப்பட்டி சரவணா நகர், லட்சுமி நகரில் உள்ள இரு வீடுகளில் கடந்த 13-ம் தேதி இரவு புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த பெண்களை மிரட்டி நான்கரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் இரு வீடுகளில் புகுந்து பெண்களை மிரட்டி நான்கரை பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்