சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, திமுகவில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்ட விதிகளின்படி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமைக் கழகமுதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி எம்.பி., அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதிசெயல்பட்டு வருகின்றனர்.
திமுக வழக்கறிஞர்களாக ப.கணேசன், சூர்யா வெற்றி கொண்டான், கே.ஜெ.சரவணன், வீ.கவிகணேசன், எம்.எல்.ஜெகன்,ஏ.என்.லிவிங்ஸ்டன், கே.மறைமலை நியமிக்கப்பட்டுள்ளனர்.