சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 11 டன் குளோரின் செலுத்தி, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.