Home இன்றைய செய்தி செகந்திராபாத் – கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

செகந்திராபாத் – கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

13
0

கோவை: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், செகந்திராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை சீசனை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07117), வரும் டிசம்பர் 4,18, 2023 ஜனவரி 8 ஆகிய தேதிகளில், செகந்திராபாத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல, கொல்லம்-செகந்திராபாத்- இடையிலான சிறப்பு ரயில் (எண்:07118), வரும் டிசம்பர் 6,20, 2023 ஜனவரி 10 ஆகிய தேதிகளில், கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், செகந்திராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Previous articleமத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம்: அண்ணாமலை அறிவிப்பு
Next articleசென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 11 டன் குளோரின் கலந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம்