ஷாங்காய்: சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா தொற்று காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை எதிர்த்து ஷாங்காய் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பற்றி களத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்காக சீன அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த செய்தி நிறுவனம் கோரியுள்ளது.
இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில் செய்தியாளரை சில காவலர்கள் சுற்றி வளைத்து அவர் கைகளுக்கு விலங்கிட்டு தாக்குகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் பிபிசி செய்தியாளர் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என பிபிசி அடையாளப்படுத்தியுள்ளது.
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா தொற்று காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை எதிர்த்து ஷாங்காய் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.