கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களின் ஆதார் அட்டை நகல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயலில் ஈடுபட்டு கைதானவர்களை ஆஜர்படுத்தும்போது, நீதிமன்றம், அரசு மருத்துவமனை, சிறை வளாகம் என பல இடங்களில் ஆதார் எண் தேவைப்படுகிறது. ஒரு சிலர் ஆதார் எண் விவரங்களை தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ஆதார் எண் பெற்று, குற்றவழக்குகளின் அடிப்படையில் தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களின் ஆதார் அட்டை நகல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது